பஞ்சந்தாங்கியில் கும்பாபிஷேக விழா; மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2026 08:06
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஊராட்சிக்குட்பட்ட பஞ்சந்தாங்கியில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. எந்திர ஸ்தாபனம், மருந்து சாற்றுதல், பூர்ணாகுதி உள்ளிட்டவைகளுக்கு பிறகு நேற்று காலை கோ பூஜை, சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு கடம் புறப்பட்டு வினை தீர்க்கும் விநாயகர் மற்றும் பாலமுருகன் கோயில் விமான கலசத்தில் திருப்புல்லாணி பாபு சாஸ்திரிகள் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபராதனைகள் நடந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பஞ்சந்தாங்கி கிராம பொதுமக்கள், முத்தரையர் சங்கம் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.