Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மத்திரெட்டிபாளையம் மத்திராலம்மன் ...  புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஏக தின லட்சார்ச்சனை புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஏக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச விழா; பக்தர்கள் புடைசூழ ஆதீனம் பல்லக்கில் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச விழா; பக்தர்கள் புடைசூழ ஆதீனம் பல்லக்கில் வீதியுலா

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2026
08:06

மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் கோலகலமாக நடைபெற்ற பட்டணபிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனம் திரு ஆபரணங்கள் பூண்டு தங்க கொரடு பாதரட்சை, கமலம் அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவகைலாய வாத்தியங்கள், மேலதாள வாத்தியங்கள் முழங்க சிவிகை பல்லக்கில் எழுந்தருளி நடைபெற்ற பட்டணப் பிரவேச  விழாவில் பொதுமக்கள் வீடுகளில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து ஆசி பெற்றனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த தருமபுர ஆதீன திருமடம் உள்ளது. சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் இவ்வாதீனத்தில் உள்ள ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா, குரு முதல்வரின் குருபூஜைவிழா மற்றும் தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் பட்டிணப் பிரவேச விழா கடந்த மே 28ஆம் தேதி ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடைபெற்றது.  11 ஆம் நாள் திருவிழாவாக குருமுதல்வர் குருபூஜை விழாவும்,  முக்கிய  நிகழ்ச்சியான தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம் சிவிகை பல்லக்கில் எழுந்தருளும் பட்டணப்பிரவேச விழா  இரவு கோலாகலமாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்  திரு ஆபரணங்கள் பூண்டு தங்க கொரடு பாதரட்சை, கமலம் அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவகைலாய வாத்தியங்கள், மேலதாள வாத்தியங்கள் முழங்க சிவிகை பல்லக்கில் எழுந்தருவினார்.  தொடர்ந்து, சிவிகை பல்லக்கினை கோடி நாட்டாமைகள் நான்கு பேர் தலைமையில் 70 பேர் தூக்கி சென்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம், செம்மறிஆடு, உள்ளிட்ட பரிவாரங்களுடன், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆராவாரத்துடன்  சிவனடியார்கள், பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் சிவிகை பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார். 

ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் ஆதீன குரு மகா சன்னிதானத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கி திருநீறு பிரசாதமாக வழங்கினார். செங்கோல் ஆதீனம், துழாவூர் ஆதீனம், தொண்டைமண்டல ஆதீனம், திண்டுக்கல் சிவபுர ஆதீனம், சைலாபுரி ஆதீனம், திருப்பனந்தாள் ஆதினம் ஆகிய ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள், தருமையாதீனப் பாடகர் வேல்முருகன், உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், திமுக வழக்குரைஞர் ராம.சேயோன், மத்திய அரசு வழக்குரைஞர் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar