கருட வாகனத்தில் எழுந்தருளிய வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2026 09:06
வில்லிவாக்கம்: சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், நேற்று கருடசேவை உத்சவம் நடந்தது.
வில்லிவாக்கம், சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, கடந்த 3-ம் தேதி செல்வ பல்லக்கு உத்சவத்துடன், 10 நாட்கள் பிரம்மோத்சவம் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு கருடசேவை உத்சவம் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில், சவுமிய தாமோதர பெருமாள் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர். மாலையில் சூரிய பிரபை வாகன உத்சவம் நடந்தது. இன்று காலை கேடயம் உத்சவமும், மாலை சேஷ வாகன உத்சவமும் நடக்க உள்ளன.