நெல்லிக்குப்பம்: வராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2026 01:06
நெல்லிக்குப்பம்: வராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில், சப்த மாதாக்கள் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.
இங்கு விநாயகர்,முருகன் கோவில்கள் புதியதாக கட்டப்பட்டன. இதையொட்டி, கடந்த 4ம் தேதி கணபதி ஹோமத்துடன் வழிபாடு துவங்கியது. கடந்த, 5ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளும்,கோபுர கலசங்கள் பிரதிஷ்டையும் நடந்தது. தொடர்ந்து, இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை பூர்ணாஹூதி தீபாராதனை முடிந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து வராஹி, விநாயகர், முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இரவு வராஹி அம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தனர்.