மதுரை: மதுரை மேலூர்ரோடு அயிலாங்குடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள லட்சுமிவராகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பூமாதேவியைக் காப்பதற்காக விஷ்ணு பன்றிமுகத்தோடு வராக அவதாரம் எடுத்தார். இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பவர் இவர். அயிலாங்குடியில், இவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கருவறை, அர்த்தமண்டபம் முழுவதும் கல்லால் ஆனது. கும்பாபிஷேகத்தையொட்டி, ஜன.21 முதல் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை நான்காம் காலயாகசாலை பூஜை முடிந்ததும், 9 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி சேஷாத்ரி முன்னிலை வகித்தார். மூலவர், விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.