பதிவு செய்த நாள்
23
ஜன
2013
12:01
பழநி கோயிலில் தங்கரத புறப்பாட்டிற்கு ரூ.2000 காணிக்கை செலுத்த வேண்டும். தங்கரதம் புறப்பாட்டிற்கு அன்றைய தினமே பணம் கட்ட விரும்புவோர் மாலை 5மணிவரை மலைகோயில் அலுவகத்தில் பணம் செலுத்தலாம். முன் கூட்டியே பணம் கட்ட விரும்புவோர் இணை ஆணையர்/நிர்வாக அதிகாரி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோயில், பழநி என்ற விலாசத்திற்கு காசோலை எடுத்து அனுப்ப வேண்டும். சின்னக்குமாரசுவாமி தங்கரதத்தில் எழுந்தருளி மலைகோயில் வெளிப்பிரகாரத்தில் உலா வருவார். ஒன்றுக்கு மேற்பட்டோர் பணம் கட்டினாலும் ஒரு முறை தான் தங்கரதம் உலா வரும். இரவு 7 மணிக்கு தங்கரதம் புறப்படும். வெளிப்பிரகாரத்தில் ஒன்பது நிலைகளில் தேர் நிறுத்தப்பட்டு பூஜை நடக்கும். தங்கரத உபயதாரருக்கு பஞ்சாமிர்தம், விபூதி, சித்ரான்னம், காமாட்சி விளக்கு, பரிவட்டம்,ராஜ அலங்கார படம் ஆகியவை வழங்குவர். தினமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி தங்கரத புறப்பாடு செய்யும் பெருமை பழநிக்கு மட்டுமே உண்டு.
இன்றைய நிகழ்ச்சி:
காலை 9.15 மணி: முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கில் எழுந்தருளல்.
இரவு 7.30 மணி: வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி.