பதிவு செய்த நாள்
24
ஜன
2013
10:01
குருவாயூர்: ஓட்டப் பந்தய நிகழ்ச்சியில் பங்கேற்க, ஐந்து யானைகள் மட்டும் போதும் என, குருவாயூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. கேரளா, திருச்சூர் மாவட்டம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும், குருவாயூர் உற்சவத்தை ஒட்டி, யானைகள் ஓட்டம் நடைபெறுவது வழக்கம். சமீப காலமாக, யானைகள் அடிக்கடி உடல் தகுதி இழப்பது, மிரண்டோடுவது, பாகன்களை தாக்குவது போன்றவை அதிகரித்து வருகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் யானைகளின் எண்ணிக்கையை குறைக்க, தேவஸ்தானம் முடிவு செய்தது. இவ்வாண்டுக்கான யானை ஓட்டத்தில், உடல் தகுதி வாய்ந்த, ஐந்து யானைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, பிப்., 23ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க செய்யலாம், என, தேவஸ்தானம் நிர்வாக குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், வெற்றி பெறும் முதல் மூன்று யானைகளை மட்டுமே, கோவிலுக்குள் வலம் வர அனுமதிப்பது என்றும், இக்கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது.