கிணத்துக்கடவு மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் பூச்சாட்டு விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2026 03:06
கிணத்துக்கடவு: செட்டியக்காபாளையம், மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நடந்தது.
கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம், மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நிகழ்ச்சி கடந்த மே மாதம், 26ம் தேதியன்று நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. ஜூன் 8ம் தேதி, சக்தி கலசம் அழைத்து வருதல் மற்றும் பூவோடு எடுக்கும் நிகழ்வு நடந்தது. 10ம் தேதி, சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாவிளக்கு மற்றும் உருவாரம் எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. 12ம் தேதி, மஞ்சள் நீராடும் விழா, சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.