Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு ... திருத்தணி கோவில் மாஸ்டர் பிளான் திட்ட பணிகள் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் திருத்தணி கோவில் மாஸ்டர் பிளான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரும் 25ல் ஸ்ரீரங்கபட்டணாவில் சமயபுரம் மாரியம்மன் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரும் 25ல் ஸ்ரீரங்கபட்டணாவில் சமயபுரம் மாரியம்மன் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2026
09:06

மாண்டியா: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவிலில், வரும், 18 முதல், 25ம் தேதி வரை, மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது.

தமிழகம் திருச்சி காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீசமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் போல, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவின் பாபுராயனகொப்பலுவில் காவிரி நதிக்கரையில் ஸ்ரீசமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுரேஷ்வர ஆச்சார்யா, தனது ஸ்துால குரு கைலாச ஆசிரம ஸ்தாபகர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ திருச்சி மஹா சுவாமிகளின் வழிகாட்டுதல்படி, ஸ்ரீரங்கபட்டணாவில் காவிரி மற்றும் லோகபாவனி சங்கமத்தில், திருச்சி சமயபுரம் கோவில் அமைப்பு போல, ஸ்ரீரங்கபட்டணா ஸ்ரீரங்கநாதர் கோவில், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் இத்திருத்தலம் அமைந்து உள்ளது.

ஆகம விதிகளின்படி, திராவிட கட்டடக்கலை நுட்பத்தில் கருங்கல் கோவில் தான் கட்ட வேண்டும் என்று உறுதி பூண்டு, 15 ஆண்டுகளாக தனது தவத்தாலும், உழைப்பாலும், 3 ஏக்கர் நிலப்பரப்பில், 5 நிலை கோபுரத்துடன், சுதை சொரூபமாக அம்மனை வடிவமைத்து, இத்தீர்த்த ஷேத்திர திருத்தலத்தை, மூர்த்தி ஸ்தலமாக உயர்த்தி, ஆலய நிர்மாண பணிகளை நிறைவேற்றி உள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் கும்பாபிஷேக விழா, ஸ்ரீஸ்ரீஸ்ரீ திருச்சி ஞானதேசிக மஹா சுவாமிகள் ஆசிர்வாதத்துடனும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர புரி மஹா சுவாமிகள் தலைமை யில், ஸ்ரீ சதாசிவபுரி பகவத்பாதாச்சார்ய சுவாமி ஸ்ரீ சுரேஷ்வர ஆச்சார்யா சங்கல்பத்தின்படி, வரும், 18ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடக்கிறது.

வரும், 18 முதல் தினமும் காலை முதல் மாலை வரை அனுக்ஞா, தன பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை; பிரவேச பலி, ரக்ஷோக்னா ஹோமம், வாஸ்து சாந்தி;

வரும், 19ல் நவக்கிரஹ ஹோமம், ஜலதி வாசம், தான்யாதி வாசம், சாந்தி ஹோமம், திஷா ஹோமம்; 20ல் யந்திர பூஜை, ஹோமம், மிருது சங்கரஹனம், கோ பூஜை; 21ல் கிராம சாந்தி, சயநாதி வாசம்; 22ல் தீர்த்த சங்கராஹனம், யாக அலங்காரம், அக்னி சங்கராஹனம், அங்குரார்ப்பனம், ரக் ஷா பந்தன், கும்ப அலங்காரம், கும்ப ஸ்தாபனம், யாக பூஜை ஹோமம், அக்னி விபஜனம், பூர்ணாஹூதி, தீபாராதனை; வரும், 23ல் சிறப்பு சாந்தி, யாக பூஜை, ஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹூதி, தீபாராதனை, சிறப்பு சாந்தி, யாக பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி,தீபாராதனை;

வரும், 24ல் சிறப்பு சாந்தி, யாக பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதன, ரத்ன நியாசம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல்; சிறப்பு சாந்தி, யாக பூஜை, ஹோமம், லட்சுமி பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, ரக் ஷா பந்தனம், அம்மன் நேத்ரம் பொருத்துதல், பிம்ப சுத்தி நடக்கிறது.

கும்பாபிஷேக நாளான, 25ம் தேதி காலையில் யாக சாலை பூஜை, ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஷாஹூதி, பிராயச்சித்தஹூதி, மஹா பூர்ணாஹூதி, மூர்த்தி சம்யோஜனம், கலசம் புறப்பாடு, விமானம், ராஜ கோபுரம் மஹா கும்பாபிஷேகம், மூலஸ்தானங்கள் மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம் நடக்கிறது.

மாலையில் அம்மனின் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar