திருவாதிரை விரதம், சந்திர தரிசனம்; நடராஜரை வழிபட நல்லதே நடக்கும்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2026 10:06
திருவாதிரை நட்சத்திரத்தன்று கடைப்பிடிக்கப்படும் இது மிகச்சிறந்த சிவ விரதமாகும். இந்த நாளில், சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியதாகக் கருதப்படுகிறது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். இன்று அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு திருமஞ்சனம் நடக்கும். முருகப்பெருமான் இந்த விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார். நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. வீட்டில் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். மாதந்தோறும் திருவாதிரை விரதமிருந்து கயிலாயத்தில் வாழும் பேறு பெறுவோம்..!
புதிய மாதத்தின் தொடக்கத்தில் வரும் சந்திர தரிசனம் செய்வது குடும்பத்தில் மங்களம், செல்வத்தையும் கொண்டு வரும். தூய்மையான மனதுடன், அமைதியாக சந்திரனைப் பார்த்து வணங்குவது சிறந்தது. சந்திர தரிசனம் (மூன்றாம் பிறை) செய்வது மனக்கஷ்டங்கள் நீங்கி, ஆயுள் விருத்தி, செல்வ செழிப்பு உண்டாகும். குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஞாபக சக்தி மேம்படும். இன்று ஆடல்வல்லானை வணங்கி ஆணவம், கன்மம் நீங்கி இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்!