ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் வரும் 31ம்தேதி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2013 11:01
ஏரல்: ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழா நிகழ்ச்சிகள் வரும் 31ம்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. முக்கிய திருவிழாவான தை அமாவாசை திருவிழா வரும் பிப்.9ம்தேதி நடக்கிறது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கோயில்களில் ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தை, ஆடி, அமாவாசை திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். திருவிழா நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி விஷேச அலங்காரத்துடன் எழுந்தருளுவார். இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா வரும் பிப்.9ம்தேதி நடக்கிற்து. இதை முன்னிட்டு வரும் 31ம்தேதி காலை 8மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தை அமாவாசை திருவிழா அன்று மதியம் 1மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசன அபிஷேகம், மாலை 4 மணிக்கு இலாமச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து பிப்.10ம்தேதி காலை 5 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், 9மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு 3ம் கால பச்சை சாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாநிதி, இரவு 11மணிக்கு கோயில் மூலஸ்தானம் சேருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து 11ம்தேதி நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தர் கருத்தப்பாண்டி நாடார் செய்து வருகிறார்.