பதிவு செய்த நாள்
24
ஜன
2013
11:01
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் ஆயிர வைசியர்களுக்கு பாத்தியமான தர்மதாவள விநாயகர், முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஜன., 17ம் தேதி கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் துவங்கின. மதுரை மீனாட்சி சுந்தரரேசுவரர் கோயில் இரண்டாவது நிர்வாக ஸ்தானிகர் கற்பூர பட்டர் என்ற ஆனந்த பட்டர் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று, ஆறாம்கால யாக பூஜை முடிந்து, கடம் புறப்பாடு நடந்தது. காலை 6.42 மணிக்கு கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மாலையில் சுவாமிகளுக்கு அலங்காரம் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத கல்யாணசுப்ரமணியர் திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு நடந்தது. விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முத்தால பரமேஸ்வரி அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர். விழா ஏற்பாடுகள் தலைவர் வேணுகோபாலன் தலைமையில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.நகை கடை உரிமையாளர்கள் எம்.எஸ்.கேசவன், என்.ஏ.வாசுதேவன், எஸ்.எம்.கணேசன், பா.பார்த்திபன், காசிவிஸ்வநாதன், பொ,ராஜரத்தினம், ஆர்.சிவக்குமார், ஜி.மணிகண்டன், சந்தானம், பி.தர்மேந்திரன், பி.ராஜசேகரன், டி.கணேசன், ஜி.செந்தில் குமார், கவுன்சிலர்கள் காமாட்சி, ஜெயராமன், மோகன் ஸ்டோர் இயக்குனர்கள் மோகன், சோமு, வேணு, பாலாஜி. இன்ஜினியர்கள் ராஜேஸ்கண்ணா, செல்வராஜ், வாசுதேவன் பாத்திரக்கடை ஜோதிமணி, சிங்காரவேலு, ஓம் சக்தி சிட்பண்ட் நிர்வாக இயக்குனர் கே.ரவீந்திரன், ஆர்.பிச்சைமணி, "ரெயின் போ ஜெ.சதீஷ்குமார், டி.ரமேஷ், ஆயிர வைசிய இளைஞர் சங்க தலைவர் விஜயகுமார், ராஜேந்திரன் பாத்திரக்கடை சரவணன், வர்த்தகர்கள் சதீஷ், ரெத்னா ரமேஷ், குமார், ஏ.ஆர்.ரத்தினம், ஆர்.திரவியம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.