ஆனி பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2026 05:06
கோவை; ஆனி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் செல்வபுரம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் உள்ள வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.