பதிவு செய்த நாள்
22
ஜூன்
2026
09:06
அன்னூர்; கோனார்பாளையம், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கோனார்பாளையம், வசவன்குட்டை செல்வ விநாயகர் கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கோபுரம் அமைக்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த, 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் மாலை திம்மநாயக்கன் புதூரில் இருந்து தீர்த்த குடங்கள், முளைப்பாரி, விமான கலசம் ஆகியவை செல்வ விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு கோபுரத்தில் விமான கலசமும், கருவறையில் யந்திர பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு, விமான கலசம் மற்றும் செல்வ விநாயகருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. செல்வ விநாயகருக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 12 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.