Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவநாத சுவாமி கோவிலில் மகா தேசிகன் ... பெரியநாயக்கன்பாளையம் கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் பெரியநாயக்கன்பாளையம் கற்பக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு உற்சவம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2026
09:06

 பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இந்தாண்டு ஆனி நாற்று நடவு உற்சவ திருவிழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று மாலை, 4:25 மணிக்கு, பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.

தேவேந்திர குல வேளாளர் மடத்தில் இருந்து பொன்னேர் பூட்டி, மேளதாளத்துடன் பக்தர்கள், கோவில் மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தனர். சிவாச்சாரியார்கள், பொன்னேருக்கு சிறப்பு பூஜை செய்து, மரியாதை செய்தனர். வயலில் பொன்னேர் பூட்டி உழுதனர். பக்தர்கள், மடத்தில் இருந்து நாற்றுகளை எடுத்து ஊர்வலமாக வயலுக்கு வந்தனர். அங்கு கோவில் குருக்கள், வயலில் இறங்கி நாற்று நட, மட நிர்வாகிகளும், பக்தர்களும் பட்டீஸ்வரரை வணங்கி, நாற்று நட்டனர். அதன் தொடர்ச்சியாக, பேரூர் பள்ளுபடல புராணம் வாசிக்கப்பட்டது. பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர், கோவிலை சுற்றி ரத வீதிகளில், திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர். சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையுடன் நாற்று நடவு விழா நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, ஆனி திருமஞ்சனம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar