Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரண்மனைப்புதுார் ஸ்ரீமாகாளியம்மன் ... பாத்திமா நாச்சியார் கோயிலில் மொகரம் பண்டிகை பூக்குழி திருவிழா பாத்திமா நாச்சியார் கோயிலில் மொகரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொகரம் பண்டிகை; மத நல்லிணக்க பூக்குண்டம் இறங்கிய நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மொகரம் பண்டிகை; மத நல்லிணக்க பூக்குண்டம் இறங்கிய நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2026
03:06

சாயல்குடி: சாயல்குடி அருகே பெரியகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பண்டிகை தினத்தில் பக்தர்களால் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே பெரியகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பண்டிகை தினத்தில்  பக்தர்கள் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி காலம் காலமாக நடந்து வருகிறது. சாயல்குடி அருகே பெரியகுளத்தில் மாமுநாச்சி அம்மன் தர்கா உள்ளது. நேற்று தர்கா மற்றும் பெரியகுளம் கிராமப் பகுதி முழுவதும் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் கொண்டிருந்தது. மொகரம் 1 அன்று 10 நாட்களுக்கு முன்பாக கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பிறை கொடி மற்றும் சந்தனக்குட சப்பர ஊர்வலம் நடந்தது. இரவில் நாடகம் நடந்தது. சாயல்குடி, கடலாடி, ஒப்பிலான், மாரியூர், வாலிநோக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.


மாமுநாச்சி அம்மன் தர்கா முன்புறம் உள்ள இடத்தில் 12 அடி நீள அகலத்தில் பெரிய அக்னிகுண்டம் வளர்க்கப்பட்டது. குண்டத்தைச் சுற்றிலும் நெருப்பு கங்குகள் பரப்பியவுடன் இன்று அதிகாலை 4:00 மணிக்கு காப்பு கட்டி விரதம் இருந்த நேர்த்திக்கடன் பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கினர். கையில் பச்சை வண்ண பிறைக்கொடியை ஏந்தியவாறு குண்டத்தில் இறங்கினர். அருகில் தலையில் முக்காடு போட்டு அமர்ந்திருந்த வேண்டுதல் கொண்ட பெண்களின் தலையில் தீக்கங்குகளை மண்வெட்டி மூலமாக கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar