Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் பூத்த பிரம்ம கமலம் பூ ; பூஜை ... சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிஷேகம் சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவர் காலத்து கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள் விழுப்புரம் அருகே கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பல்லவர் காலத்து கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள் விழுப்புரம் அருகே கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2026
05:06

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


விழுப்புரம் அடுத்த பேரணி, மூங்கில்பட்டு கிராமங்களில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை, ஐயனார், மூத்ததேவி மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்த நந்தி உள்ளிட்ட சிற்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதுகுறித்து, செங்குட்டுவன் கூறியதாவது: கூட்டேரிப்பட்டு அடுத்த பேரணி பகுதியில் கொற்றவை சிற்பம் உள்ளது. 5 அடிக்கும் மேல் பலகைக் கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டு, 8 கரங்களுடன் எருமைத் தலைமீது நின்றிருக்கிறார். கொற்றவையின் முன் வலக்கரம் மேல்நோக்கி விரிந்தும், அதனுள் கிளி அமர்ந்திருக்கும் வகையில் கலை நயத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. கொற்றவையின் வலது காலுக்கு அருகே படுமெடுத்தாடும் பாம்பு காட்டப்பட்டுள்ளது. இதுவரை எந்தச் சிற்பத்திலும் பாம்பு தனித்தில்லை. இதனால், இக்கொற்றவைச் சிற்பம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கொற்றவைக்கு அருகிலேயே முற்றுப் பெறாத ஐயனார் சிற்பமும், பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் சூரியன் தெய்வ சிற்பமும் காணப்படுகின்றன. இவையும் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவையாகும். 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. இங்குள்ள ஜைனக் கோவிலின் வாசலுக்கு அருகே சோழர் காலத்தைச் சேர்ந்த கலைநயமிக்க நந்தி சிற்பம் காணப்படுகிறது.  இப்பகுதியில் பல்லவர் காலத்தில் சிவாலயம் இருந்து மறைந்துள்ளதை இந்த சிற்பங்கள் காட்டுகின்றன.


மூங்கில்பட்டு கிராமத்தில் ராமநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் பலகைக் கல் சிற்பம் காணப்படுகிறது. இதனை அன்னபூரணி என வணங்கி வருகின்றனர். ஆனால், அது மூத்ததேவி சிற்பம் ஆகும். அழகிய ஆடை அலங்காரம் மற்றும் அணிகலன்களுடன், திண்டின் மீது சாய்ந்து அமர்ந்த நிலையில் மூத்ததேவி காணப்படுகிறார். சிற்பத்தின் வலது மேல் மூலையில் மகன் மாந்தனும், இடது மூலையில் மகள் மாந்தியும் காணப்படுகின்றனர். பல்லவர் காலத்திற்குரிய கலைப்பாணியில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சிவாலய வளாகத்தில், கலைநயத்துடன் கூடிய கொற்றவை, விஷ்ணு சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்த சிற்பங்கள் அனைத்தும் கி.பி., 8 மற்றும் 9ம் நுாற்றாண்டிற்கு உரியவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூங்கில்பட்டு கிராமத்தில் சிவ, விஷ்ணு ஆலயங்கள் இருந்திருக்கின்றன. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார். ஆய்வின்போது தென்கோடிப்பாக்கம் தினேஷ், பேரணி புஷ்பநாதன், புதுச்சேரி செங்குட்டுவன், மூங்கில்பட்டு காசிநாதன் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar