Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிஷேகம் அய்யனார் கோவிலில் மண்டலாபிஷேகம் அய்யனார் கோவிலில் மண்டலாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை – திருத்தணி ரயில்கள் ரத்து; முருகன் கோவிலில் குறைந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை – திருத்தணி ரயில்கள் ரத்து; முருகன் கோவிலில் குறைந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2026
05:06

திருத்தணி; சென்னையில் இருந்து திருத்தணி வழியாக செல்லும் அனைத்து விரைவு மற்றும் மின்சார ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டதால், முருகன் கோவிலுக்கு மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வந்தனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், வழக்கத்திற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, குறைந்த பட்சம் 2 – 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசிப்பர். இந்நிலையில், நேற்று முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை ஆகும். இதனால், முருகன் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பு பகுதியில், ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் காரணமாக, நேற்று திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக, சென்னை சென்டரல் வரை செல்லும் அனைத்து விரைவு மற்றும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னை மார்க்கத்தில் இருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு ரயில் மூலம் வரும் பக்தர்கள், இன்று யாரும் வரவில்லை. இதனால், வழக்கத்திற்கு மாறாக, விடுமுறை நாளிலும் முருகன் கோவிலுக்கு மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வந்திருந்தனர். மலைக்கோவிலில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடியதால், பொதுவழியில் வெறும், 10 – 15 நிமிடங்களில் பக்தர்கள் மூலவரை நெரிசலின்றி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar