Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் அம்மையார் கோவிலில் ... ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகளுக்கு வழிபாட்டு பயிற்சி ராமேஸ்வரத்தில் கிராம கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறை பணிகள் இனி இணையதளத்தில் மட்டுமே
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 அறநிலையத்துறை பணிகள் இனி இணையதளத்தில் மட்டுமே

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2026
12:06

 சென்னை: ‘அறநிலையத் துறை அலுவல் தொடர்புகளை, இணையதளத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்’ என, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் வினய் உத்தரவிட்டுள்ளார்.


அவரது அறிக்கை: ஒருங்கிணைக்கப்பட்ட கோவில் நிர்வாக மேலாண்மை திட்டத்தின்படி, பக்தர்களுக்கான சேவைகள் தொடர்பான விபரங்களை அறிய, தேசிய தகவலியல் மைய உதவியுடன் இணையதளம் தொடங்கப் பட்டது. இப்போதுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, தகவல் பாதுகாப்பு போன்ற தரவுகள், இந்த இணையத்தளத்தில் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இணையதளத்தின் வாயிலாக கட்டணம் செலுத்தி, பக்தர்கள் பயன் பெறலாம். இந்த இணையதள செயல்பாடுகளை சீராய்வு செய்தபோது, ஒவ்வொரு தொகுப்புகளிலும் விபரங்கள் உள்ளீடு செய்யப்படாமலும், படிவங்கள் பூர்த்தி செய்யப்படாமலும் நிலுவையில் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, அனைத்து சார்நிலை அலுவலர்களும் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள், விபரங்களை விடுதல் இன்றி உள்ளீடு செய்ய வேண்டும். இதைசரிபார்த்து உறுதி செய்து, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். ஆணையர் அலுவலகத்திற்கு தேவைப்படும் விபரங்களை, இனி, காகித வடிவில் அனுப்பக் கூடாது. கோரப்படும் விபரங்களை அதற்குரிய இணையதளப் படிவத்தில், உடனுக்குடன் அனைத்து சார்நிலை அலுவலர்களும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் சார்நிலை அலுவலர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar