தேவி காமக்ஷி மந்திர் மகா கும்பாபிஷேகம்; காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2026 05:07
புதுடில்லி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிஜி அவர்களின் ஆசியுடனும் முன்னிலையுடனும் ஸ்ரீ தேவி காமக்ஷி மந்திரின் மகாகும்பாபிஷேகம் இன்று காலை (ஜூலை 1ல்) புதுடில்லியில் நடைபெற்றது. ஸ்ரீ கணபதி, ஸ்ரீ காமாக்ஷி தேவி மற்றும் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் சந்நிதிகளின் விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சந்நிதிகளில் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆபரண சமர்ப்பணம் செய்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.