பதிவு செய்த நாள்
28
ஜன
2013
11:01
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது.
நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் 4வது நாளான 21ம் தேதி "திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாக அமைந்த நெல்லுக்கு இறைவன் வேலியிட்ட திருநாள் கொண்டாடப்பட்டது. தைப்பூச தீர்த்தவாரியை முன்னிட்டு உச்சிகாலை பூஜை முடிந்தவுடன் தாமிரபரணி அம்பாள், குங்கிலியநாயானர், சண்டிகேஸ்வரர், அகஸ்தியர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி, சுவாமி, அம்பாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் ரதவீதி சுற்றி, நெல்லை கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளினர். தீர்த்தவாரி நடந்தது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதிஅம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. தாமிரபரணியில் அஸ்திரதேவர், அஸ்திரதேவிக்கு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. இன்று (28ம் தேதி) காந்திமதி அம்மன் சன்னதியை அடுத்த சவுந்திரசபையில் பகல் 11 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் வைபவமும், நாளை (29ம் தேதி) இரவு நெல்லையப்பர் வெளித் தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் தெப்ப உற்சவமும் நடக்கிறது.