புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், வரும் 1ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது.லாஸ்பேட்டை இசிஆரில் உள்ள கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், வரும் 1ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், குத்து விளக்கு, தாம்பாளத் தட்டு, பஞ்சபாத்திரக் கரண்டி, தூபக் கலசம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். பூஜைக்குத் தேவையான பிற பொருட்கள், கோவிலில் வழங்கப்படும்.கூட்டு வழிபாட்டினால் குடும்ப மற்றும் உலக அமைதி, மன மகிழ்ச்சி மற்றும் வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள விரும்புவோர், கோவில் நிர்வாகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.