Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் வி.ஐ.பி., தரிசனத்தை ... ஒட்டன்சத்திரம் அருகே 15ம் நுாற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு ஒட்டன்சத்திரம் அருகே 15ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை; 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை; 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2026
10:07

ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களில் அமர்நாத் யாத்திரைக்கு 1.13 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சாதனை படைத்தனர். யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில், கடல் மட்டத்தில் இருந்து, 12,730 அடி உயரத்தில் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது.


இந்தக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை, கடந்த 3ல் தொடங்கியது. அடுத்த மாதம், 28 வரை யாத்திரை நடக்க உள்ளது. கடந்த 5 நாட்களில் அமர்நாத் யாத்திரைக்கு 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இது குறித்து ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியதாவது:  புனித யாத்திரையை அனைவருக்கும் உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாக மாற்றுவதும், அவர்களுக்குச் சாத்தியமான சிறந்த வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதும் எங்கள் இலக்காகும். இதுவரை, 1.13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித குகையில் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் அனைவரும் தடையற்ற தரிசனம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நமது நிருபர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar