Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ... இந்திரன் பூனை வடிவில் பூஜை செய்த புனுகீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் உலா இந்திரன் பூனை வடிவில் பூஜை செய்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை கோவிலுக்கு 1,320 படிகளில் தீர்த்தம் கொண்டு செல்ல புது காளைக்கு பயிற்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னிமலை கோவிலுக்கு 1,320 படிகளில் தீர்த்தம் கொண்டு செல்ல புது காளைக்கு பயிற்சி

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2026
12:07

ஈரோடு; சென்னிமலை முருகன் கோவிலில், 1,320 படிகள் வழியாக திருமஞ்சன தீர்த்தம் சுமந்து செல்லும் புதிய காளைக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


சென்னிமலை:ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. மலை மீதுள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்ய, மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து தினமும், 1,320 படி வழியாக தீர்த்தக்குடங்கள் காளை மீது வைத்து கொண்டு செல்வது நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. இதற்காக கோசாலையில் பொதிகாளை பாராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருமஞ்சனம் கொண்டு செல்லும் ஒரு காளைக்கு வயதாகி விட்டதால் சிரமப்படுகிறது. இதனால் பக்தர் ஒருவர் முருகப்பெருமானுக்கு, இரண்டாண்டுகளுக்கு முன் தானம் கொடுத்து பராமரிக்கப்படும் கன்றுக்குட்டியை பயன்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக கன்றுக்குட்டிக்கு ஆண்மை நீக்கம் செய்து, மூன்று மாதங்களாக சிறப்பு உணவு கொடுத்து தயார் செய்தனர். தற்போது பழைய காளையுடன் பயிற்சிக்காக புது காளையை தினமும் ஓட்டி செல்கின்றனர். முதல் கட்ட பயிற்சியில் தீர்த்தக்குடம் வைக்காமல் அழைத்து செல்லப்படும். மூன்று மாத பயிற்சிக்கு பிறகு நன்கு பழகிய பின்னால், திருமஞ்சனக்குடம் சுமந்து செல்ல பயன்படுத்தப்படும் என்று, மாடு பராமரிக்கும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar