Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலை கோவிலுக்கு 1,320 படிகளில் ... கோவை உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை கோவை உக்கடம் கரிவரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்திரன் பூனை வடிவில் பூஜை செய்த புனுகீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இந்திரன் பூனை வடிவில் பூஜை செய்த புனுகீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் உலா

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2026
12:07

மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த புனுகீஸ்வரர் கோயில் 9-ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேகமும், 20-ஆம் ஆண்டு அறுபத்துமூவர் வீதியுலாவில் பஞ்சமூர்த்திகளுக்கு நடைபெற்ற சோடச தீபாரதனையிலும் அறுபத்துமூவருக்கு நடைபெற்ற மகாதீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.


மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வேத காலத்தில் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட சாபம் நீங்க இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து இங்கு உள்ள சிவன் மற்றும் சாந்தநாயகி அம்மனை வழிபாடு செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. மேலும் அடர்ந்த வனமாக இருந்த பகுதியில் புனுகு பூனை உயர்ந்த வாசனை திரவியமான புனுகினை சாத்தி சிவலிங்கத்திற்கு வழிபாடு நடைபெற்றது என்றும் தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் இதனை அறிந்து காட்டை சீர்திருத்தி கோயிலை அமைத்தான் என்றும் வரலாறு தெரிவிக்கின்றது. இத்தகைய பழமை வாய்ந்த இக்கோயிலின் 9-ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேகமும், 20-ஆம் ஆண்டு அறுபத்துமூன்று நாயன்மார் வீதியுலாவும் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை பஞ்சமூர்த்தி, அறுபத்துமூவர், தொகையடியார், ஶ்ரீமணிவாசகர், சேக்கிழார், மூலவர், எழுந்தருளி திருமேணிகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் அறுபத்துமூன்று நாயன்மார்கள் கோயில் கொடிமரம் அருகே எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து திருவாடுதுறை ஆதீனக்கட்டளை வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமூர்திகளுக்கு சோடச தீபாரதனை, மகாதீபாரதனை செய்யப்பட்டது. அறுபத்துமூவருக்கு மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகளுடன் அறுபத்துமூவர் வீதியுலா நடைபெற்றது. சிவ கைலாய வாத்தியங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க, தீவிட்டி ஏந்தி நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாரதனை எடுத்து தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar