Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் சிவலோகநாதர் ...  எல்லைகாளி கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம் எல்லைகாளி கோவில் கும்பாபிஷேகம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளம் தோண்டியபோது 3 அடி உயர விநாயகர் கற்சிலை கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பள்ளம் தோண்டியபோது 3 அடி உயர விநாயகர் கற்சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2026
07:07

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு, கவரை தெருவில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக, நேற்று பள்ளம் தோண்டியபோது விநாயகர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருக்காலிமேடு கவரை தெருவில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நேற்று நடந்தது. அப்போது கற்சிலை ஒன்று தென்பட்டது. இதையடுத்து பள்ளம் தோண்டும் பணியை நிறுத்திய தொழிலாளர்கள், கற்சிலையை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். அது மூன்றடி உயர விநாயகர் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியினர் விநாயகர் கற்சிலையை கவரை தெருவில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் அருங்காட்சிய காப்பாட்சியர் உமாசங்கர் கூறியதாவது: திருக்காலிமேட்டில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் கற்சிலை, பழமையான சிலை அல்ல. இந்த சிலை மிஷின் கட்டிங்கில் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் செய்யப்பட்ட சிலை போன்று உள்ளது. இந்த சிலையில், விநாயகரின் தும்பிக்கை, கை பாகங்கள் உடைந்த நிலையில் பின்னமாகி இருந்ததால், சிற்ப சாஸ்திரத்தின்படி பூஜைக்கு ஏற்ற சிலை இல்லை என்பதால், மண்ணில் புதைத்து இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar