பதிவு செய்த நாள்
29
ஜன
2013
11:01
தர்மபுரி: பாலக்கோடு தாலுகா, காட்டம்பட்டி அக்ரஹாரம், ஸ்ரீநிவாஸப்பெருமாள் கோவிலில், பிப்ரவரி 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. காட்டம்பட்டி, அக்ரஹாரத்தில், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீநிவாஸ பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இக்கோவிலில், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீநிவாஸ பெருமாள் (ப்ராசீனமான மூலவர்) ஸ்ரீபத்மாவதி தயார், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் (உற்சவர்) ஆகியோரும் சேவை சாதிக்கின்றனர். இக்கோவிலில், ஸ்ரீசங்கரத்தாழ்வார் (மூலவர்) ஸ்ரீஆண்டாள், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீபெரியாழ்வார், ஸ்ரீதிருமங்கையாழ்வார், ஸ்ரீராமானுஷர், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகியோர்களின் சன்னதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மூர்த்திகளில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா வரும் ஃபிப்ரவரி, 1ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நாளை (ஜன.,30) காலை, 7 மணிக்கு திருமஞ்சனம், மாலை, 6 மணிக்கு அங்குரார்ப்பணம், மிருத்ஸங்க்ரணம், கும்ப பிரதிஷ்டை, மூர்த்திகளுக்கு பிராணப் பிரதிஷ்டை, சாற்று முறை, கோஷ்டி நடக்கிறது. 31ம் தேதி காலை, 7.30 மணிக்கு கங்கண பிரதிஷ்டை, ஹோமம், சாற்று முறையும், மதியம், 1 மணிக்கு புதிய உற்சவர்களுக்கு திருமஞ்சனமும், மாலை, 6 மணிக்கு ஹோமம், சாற்று முறை, கோஷ்டி நடக்கிறது.
பிப்ரவரி, 1ம் தேதி காலை, 6 மணிக்கு ஹோமம் தொடர்ந்து, பூர்ணாஹுதி, விமானம், ஸந்நதி ப்ரோஷக்ஷணம், புதிய உற்சவர் பிரதிஷ்டை, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீ ஆஞ்சயேர், ஸ்ரீ மடப்பள்ளி நாச்சியார், சுற்றுபலிபீடங்கள் பிரதிஷ்டையும், கும்ப புறப்பாடு, கும்பாபிஷேகம், பெரியா சாற்று முறை, கோஷ்டி நடக்கிறது. மாலை, 6 மணிக்கு கருடசேவை (புதிய உற்சவ மூர்த்தி, புதிய கருட வாகனத்தில் புறப்பாடு) பெருமாள் திரும்பியவுடன் சாற்று முறை, ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் மரியாதை யதிகள் ஸம்பாவனை சாற்று முறை, கோஷ்டி ஆகியவை நடக்கிறது. இதையொட்டி, நாளை (ஜன.,30) மற்றும், 31ம் தேதி அனந்தபத்ம நாபச்சாரியாரின் உபந்யாஸம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில், நடிகர் டில்லி கணேஷ் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.