ஆனி அமாவாசை; தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2026 07:07
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் சுவாமி கோயிலில் ஆனி மாத அமாவாசை பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். தேசி லிங்கேஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகள், கோயில் அர்ச்சகர் சிவ தினேஷ் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.