Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் வெள்ளை யானையாக ... திருமலையில் பல்லவ உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாட்டம் திருமலையில் பல்லவ உற்சவம் வெகு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் புதிய தேர் அமைக்கும் பணி விறுவிறுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் புதிய தேர் அமைக்கும் பணி விறுவிறுப்பு

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2026
10:07

பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில், புதிய தேர் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோயிலாகவும், பிரசித்தி பெற்ற கோயிலாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. இந்நிலையில், இக்கோயிலில், பங்குனி உத்திரத்தில் தேர் திருவிழா நடக்கும்‌. இதில், பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர் ஆகிய 5 தேர்கள் வலம் வரும். இந்நிலையில், பட்டீஸ்வரர் தேர் உருவாக்கப்பட்டு, 300 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், தேரின் உறுதித்தன்மை சான்று கிடைக்காமல், இந்தாண்டு, பல்வேறு இழுபறிகளுக்கு பின் தேரோட்டம் நடந்தது. இதனையடுத்து, 1.41 கோடி ரூபாய் மதிப்பில், பட்டீஸ்வரருக்கு புதிய தேர் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்காக, முதற்கட்டமாக, பெரம்பலூரில் இருந்து, 3 டன் எடையுள்ள இலுப்பை மற்றும் தேக்கு மரங்கள் கொண்டுவரப்பட்டு, தேருக்கான சிற்பங்கள் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து அறநிலையத்துறை துணை கமிஷனர் விமலா கூறுகையில்,"புதிய தேர் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. வரும் தை மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, மாசி மாதத்தில் தேர் வெள்ளோட்டம் நடத்தப்படும். அடுத்தாண்டு புதிய தேரில், தேரோட்டம் நடக்கும்,"என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி, திருவோணம் இரண்டும் ஒரே நாளில் வருவது மிக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar