ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் பிரமோற்சவ கொடியேற்றம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2026 04:07
கடலுார்: ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் பிரமோற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜைகள் முடிந்து, கொடியேற்றம் நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினமும் இரவு 7:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது. வரும் 31ம் தேதி காலை செடல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, ஆக., 1ம் தேதி இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும், 2ம் தேதி காலை 7:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. மேலும், 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், 4ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.