உத்தரகோசமங்கையில் ஆஷாடா நவராத்திரி நிறைவு; மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2026 04:07
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு அருகே வடக்கு பகுதியில் தனி சன்னதி கோயிலாக வராகி அம்மன் கோயில் உள்ளது. ஆஷா நவராத்திரி என்பது ஆனி, ஆடி மாதங்களுக்கு இடையில் வரும் 9 நாட்கள் சக்தி வழிபாடாகும். சகல ஐஸ்வர்யங்களை பெறவும், நோய் நொடிகளில் இருந்து விடுபடவும் இவ்வழிபாடு உதவுகிறது.
ஒன்பது நாட்களும் மூலவர் மற்றும் உற்ஸவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இன்று ஆஷாட நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பழங்கள், கிழங்குகள், வஸ்திரம் உள்ளிட்டவைகள் நெய்வேதியமாக வைக்கப்பட்டது. பெண்கள் விரலி மஞ்சளை உருண்டையாக அரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.