ஆடி வெள்ளி; முத்தங்கி அலங்காரத்தில் முத்துமாரியம்மன் அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2026 11:07
கோவை; ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை மற்றும் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோவில்களில் அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் ராம் நகர் வி என் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.