பெருநாழி; பெருநாழி அருகே அரியமங்கலத்தில் உள்ள தர்ம முனிஸ்வரர், ராஜ லாட சன்னியாசி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர்கள் லாட சன்னியாசி, தர்ம முனீஸ்வரர், சித்தி விநாயகர், அரியநாச்சி அம்மன், முத்துமாரியம்மன், காளியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. யாக வேள்வி வளர்க்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அரியமங்கலம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.