சதுரகிரி மலை மலையாண்டி சுவாமி கோவில் ஆடி படையல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2026 08:07
நத்தம்; நத்தம் அருகே பூதகுடி கிராமம் சதுரகிரி மலையில் மலையாண்டி கோவிலில் ஆடி படையல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மலை உச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேல்களுக்கு சந்தனம் தெளித்து பூஜை செய்யப்பட்டு,வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆட்டுக்கிடாய்கள் வெட்டி அசைவ அன்னதானம் வழங்கபட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பூதகுடி ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.