Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூசிவாக்கம் மண்டலேஸ்வரர் கோவிலை ... அம்மன் கோயில்களில் முளைக்கொட்டு உற்ஸவ விழா கோலாகலம் அம்மன் கோயில்களில் முளைக்கொட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணியின் போது பழங்கால கிணறு கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணியின் போது பழங்கால கிணறு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2026
04:07

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோவில் திருப்பணியின் போது பழங்கால ஆழ்கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.


விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தில் பழமையான பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பிக்கும் விதமாக, கிராம மக்கள் சார்பில், நிர்வாக குழு அமைத்து, திருப்பணி மேற்கொண்டு புதிய மண்டபம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், கோவில் முன் பகுதியில் ஒரு டன் அளவிலான நந்திகேஸ்வரர் சிலை வைப்பதற்காக பணிகள் நடந்தது. அதற்காக ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டியபோது, அந்த இடத்தில் பழங்கால கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணறு 3 மீட்டர் சுற்றளவில், 6 அடி ஆழத்திற்கு இருந்தது. இதனால், அந்த இடத்தில் நந்தி சிலை நிறுவும் பணியை தற்காலிகமாக நிறுத்திய கோவில் நிர்வாகத்தினர், கிணறு இருந்ததன் காரணம் குறித்து, ஆழமாக தோண்டி பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கிணறை சுற்றுப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். கிணற்றை மூடிவிட்டு நந்தி சிலை அமைப்பதா அல்லது அருகில் மாற்றி அமைப்பதா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar