சந்திராஷ்டம தினத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2013 03:01
சந்திரன் நம் மனதிற்கு அதிபதி. இவன் நமது ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதே சந்திராஷ்டம தினமாகும். இந்நாளில் மனக்குழப்பம், ஞாபகமறதி ஏற்படவும், வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவும் வாய்ப்புண்டு. அதனால் கவனமாக இருக்கவேண்டும் எனவே, சந்திராஷ்டம தினங்களில் முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதையும், சுப காரியங்களில் ஈடுபடுவதையும் தள்ளி வைக்க வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அன்று உங்கள் கடமைகளைச் செய்யும் முன் பெற்ற தாயிடம் ஆசி பெறுவதும், குலதெய்வத்தை வழிபடுவதும் சிறந்த பரிகாரங்களாகும்.