பதிவு செய்த நாள்
31
ஜன
2013
10:01
சென்னை: மெரினாவில், உலக சாதனைக்காக, 1,009 குழந்தைகள் காந்தி வேடம் அணிந்து, ஊர்வலமாக சென்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், "காந்தி உலக மையம் என்ற அமைப்பு, இயங்கி வருகிறது. காந்தியின் 65வது, நினைவு நாளான நேற்று, உலக சாதனை படைக்க, இந்த அமைப்பு, 1,009 குழந்தைகளுக்கு காந்தி வேடம் அணிவித்து, மெரினாவில் ஊர்வலம் நடத்தியது. இதற்காக, நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுக் குமிடிப்பூண்டி கிராமத்தில், 1,015 குழந்தைகளுக்கு, மொட்டை அடிக்கப்பட்டது. இதில், 1,015, குழந்தைகளுக்கு, 40 நிமிடத்தில், 138 முடிவெட்டும் கலைஞர்களை அமர்த்தி, மொட்டை அடிக்கப்பட்டது. இதற்க்கு இந்தியா மற்றும், தமிழக சாதனைக்கான விருது கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று மெரினாவில், நேற்று காலை, 1,009 காந்தி வேடம் அணிந்த, குழந்தைகள், நடை பயிற்ச்சியின் நன்மையை எடுத்துக்கூறும் வண்ணம், "நடை, நோய்க்கு தடை என்ற பதாகை ஏந்தி, ஊர்வலம் நடத்தினர். இந்த, ஊர்வலத்திற்க்கு, ஆசிய மற்றும், லிம்கா சாதனை கிடைத்தது. மேலும், 1,009 குழந்தைகள் மொட்டை அடித்து, ஊர்வலம் செல்லும் பதிவுகள், "கின்னஸ் உலக சாதனைக்காக, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.