நகரி: திருமலையில் பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை மூலம் அதிக வருமானம் கிடைத்துவருவதாக திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி, சீனிவாச ராஜு தெரிவித்தார்.திருமலையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கையைவிற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம், கோவில் உண்டியல் வருமானத்திற்கு சமமாக உள்ளது.சமீபத்தில், 622 டன் தலை முடியை, இ-ஏலம் மூலம் ஏலம் விடப்பட்டதில், 274 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இருப்பில், 370 டன் தலைமுடி உள்ளது. அதை விற்றால், 215 கோடி ரூபாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.