பதிவு செய்த நாள்
31
ஜன
2013
11:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் சுவாமி சன்னதி கருவறை கதவு, படிக்கட்டில் புதிதாக வடிவமைத்த வெள்ளி தகடு பதிக்கப்பட்டது. இக்கோயில் கருவறை வெள்ளிக்கதவு, வெள்ளி படி மட்டும் சேதமடைந்தது. அதை அகற்றிவிட்டு, வெள்ளி தகட்டில் புதிய படிக்கட்டு அமைக்க, கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. நடந்த 1955ம் ஆண்டில், கோயில் கருவறைக்கு வெள்ளிக்கதவு, படிகட்டு அமைத்து கொடுத்த, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சொர்ணாம்பிகா மோட்டார்ஸ் நிறுவனத்தினர், சேதமடைந்த வெள்ளி படிக்கட்டிற்கு, பதிலாக புதிய படிகட்டு அமைக்க முன்வந்தனர். அதன்படி, பத்தரை கிலோ இருந்த, சேதமடைந்த வெள்ளி தகடு படிகட்டை அகற்றி, மதுரை ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் பதினொன்றரை கிலோ எடையில், நான்கு அடி நீளம், இரண்டே முக்கால் அடி அகலத்தில், 30 நாளில் வெள்ளி தகட்டில், படிக்கட்டு உருவாக்கப்பட்டது. இதனை நேற்று, சுவாமி சன்னதி வெள்ளி கதவு, படிக்கட்டில் பதிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.