ராமேஸ்வரம்: ஆடி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் மகா ஆரத்தி நடந்தது. உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஒவ்வொரு பவுர்ணமி நாளில் சமுத்திர ஆரத்தி குழு சார்பில் மகா ஆரத்தி பூஜை நடக்கும். அதன்படி நேற்று ஆடி பவுர்ணமி யொட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க மகா ஆரத்தி பூஜை நடந்தது. இதில் ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் ராமு, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.