பரமக்குடியில் கருப்பணசாமிக்கு அபிஷேகம் சந்தனம் சாற்றி வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2026 08:07
பரமக்குடி: பரமக்குடி கருப்பண சுவாமி சன்னதிகளில் ஆடி பவுர்ணமியில் அபிஷேகம், 18 படிகள் மற்றும் கதவு களுக்கு சந்தன காப்பு சாற்றி வழிபாடு நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு காவல் தெய்வம் கருப்பணசாமி அருள் பாலிகிறார். நேற்று முன்தினம் பவுர்ணமி நாளில் இரவு 9:00 மணிக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
*பரமக்குடி சுந்தர் நகர் காக்காதோப்பு பெருமாள் கோயில் முன் 18ம் படி கருப்பணசாமிக்கு இரவு 7:00 மணி துவங்கி அபி ஷேகம் நடந்தது. தொடர்ந்து 18 படி களுக்கும் அபிஷேகம் நிறைவடைந்து சந்தனம் சாற்றி சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
*பரமக்குடி புதுநகர் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு புதிய மணி நிலை கதவுகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு சந்தன அபிஷேகம், மாலை மற்றும் வஸ்திரங்கள் சாற்றி சூடமேற்றி வழிபாடு நடத்தினர்.
பரமக்குடியில் உள்ள அனைத்து கருப்பணசாமி சன்னதிகளிலும் நடந்த விழாக்களில் ஏராள மான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.