Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவி ஏழை முத்துமாரியம்மன் கோவில் ...  கடலுார் அம்மன் கோவில்களில் செடல் உற்சவம்; பக்தர்கள் தரிசனம்  கடலுார் அம்மன் கோவில்களில் செடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூரில் ஸ்ரீகிருஷ்ண மஹோத்சவ விழா தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாப்பூரில் ஸ்ரீகிருஷ்ண மஹோத்சவ விழா தொடக்கம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2026
10:08

சென்னை: சென்னை மயிலாப்பூரில், ஸ்ரீகிருஷ்ண மஹோத்சவ விழா நேற்று தொடங்கியது.


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீ ஞான அத்வைத பீடம், ஸ்ரீ விஷ்ணு மோகன் அறக்கட்டளை, பாரதிய வித்யா பவன் ஆகியவை இணைந்து, ‘ஸ்ரீகிருஷ்ண மஹோத்வசம்’ என்ற விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. இந்த வகையில், 16ம் ஆண்டாக ஆறு நாட்கள் நடக்கும், ‘ஸ்ரீ கிருஷ்ண மஹோத்சவம்’ விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில், ஸ்ரீ விஷ்ணு மோகன் அறக்கட்டளை தலைவர், சுவாமி ஸ்ரீ ஹரி பிரசாத் பேசியதாவது: ஸ்ரீ ஞான அத்வைத பீடத்தை நிறுவிய பூஜ்யஸ்ரீ சத்குரு சுவாமி ஞானானந்த சரஸ்வதி மாதாஜியின் 97-வது ஜென்ம ஜெயந்தியை முன்னிட்டு, இந்த ஆன்மிக விழா ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. நாடு முழுதும் 112-க்கும் மேற்பட்ட கோவில்களில், அன்னதான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவது, ‘அனைவரும் அவருக்கே உரியவர்கள்’ என்பதே. ‘எவர் எந்த வழியில் என்னை அணுகினாலும், அவர்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்; பிற தெய்வங்களை வழிபடுபவர்களும் என்னையே வழிபடுகின்றனர்; அவர்களின் நம்பிக்கையை உறுதியாக்குபவனும் நானே’ என, பகவத் கீதையில் அவர் அருளியுள்ளார். இதனால், பகவானிடம் ‘பிறர்’ என்ற பாகுபாடே இல்லை. இத்தகைய சிறப்புமிக்க ஆன்மிகக் கருத்தை, 16 ஆண்டுகளாக பிரவசனம், சங்கீதம் மற்றும் நாட்டியக் கலைகள் மூலமாக தொடர்ந்து பரப்பும் பணி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். நேற்று தொடங்கிய இந்த விழா, ஆக., 5 வரை நடக்கிறது. 


என்னென்ன நிகழ்வுகள்? இன்று துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசம், திருச்சூர் சகோதரர்கள் இசை கச்சேரி நடக்கிறது. நாளை, சுசித்ரா பாலசுப்ரமணியன் சொற்பொழிவும், நாளை மறுநாள், வைஷ்ணவி ராமதாஸ் இசை கச்சேரி மற்றும் சுஜாதா மொஹாபத்ராவின், ‘ஒடிசி’ நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து, ஆக., 4ல், கோபிகா வர்மாவின் மோகினியாட்டம், பத்மினி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மாணவர்களின் ‘பரதநாட்டியம்’ நடக்கிறது. ஆக., 5ம் தேதி, உ.வே.தாமல் ராமகிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. அனுமதி இலவசம்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar