சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை விழா; கால்நாட்டுடன் தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2026 10:08
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடில்கள் அமைத்து தங்கி வழிபட்டு வருகின்றனர். வரும் 12-ம் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ள நிலையில், நேற்று காலை மூலவர் சொரிமுத்து அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கால்நாட்டு வைபவம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.