பழநி பெரியாவுடையார் கோயிலில் சண்முக நதி ஆற்றில் மண் எடுத்து சப்த கன்னியர் பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2026 10:08
பழநி: பழநி, பெரியாவுடையார் கோயிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு சப்த கன்னியர் பூஜை நடந்தது.
பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பழநி, கிழக்கு ரதவீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கணபதி பூஜை கலச பூஜை நடந்தது. தொடர்ந்து சந்திரசேகர்,ஆனந்தவல்லி அம்மன் விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்தர தேவர், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலுக்கு புறப்பாடு நடந்தது. பெரியாவுடையார் கோயிலின் முன் சண்முக நதி ஆற்றில் மண் எடுத்து சப்த கன்னிகள் பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அதன்பின் சந்தர சேகர், ஆனந்தவல்லி, சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்பிரமணியம் குருக்கள் நிகழ்த்தினர். கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி முன்னிலையில் நிகழ்ச்சி நடந்தது.