Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனதுக்கு நிம்மதி தரும் ஆதிசக்தி ... 10,000 குடும்பத்தின் குலதெய்வமான ஸ்ரீ லட்சுமி ஆதிநாராயண சுவாமி 10,000 குடும்பத்தின் குலதெய்வமான ஸ்ரீ ...
முதல் பக்கம் » துளிகள்
துறவியின் வேண்டுகோளை ஏற்ற ஸ்ரீஅம்பாதேவி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துறவியின் வேண்டுகோளை ஏற்ற ஸ்ரீஅம்பாதேவி

பதிவு செய்த நாள்

04 ஆக
2026
10:08

ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுாரில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்பாதேவி கோவில். இத்தலம், அதானி அருகில் உள்ள ஹிரேஹரிவனத்தில் 1876ல் பிறந்த ஸ்ரீசிதானந்தர் என்ற துறவியுடன் தொடர்பு உள்ளது.

இவர், சிறு வயதிலேயே தேவியின் தெய்வீக தரிசனங்களை பெற்றதாக பக்தர்கள் கருதினர். சிதானந்தர், வறுமையில் வளர்ந்தாலும், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டார். துங்கபத்ரா அருகில் அறிஞர் ஹோனப்பாவிடம் ஆரம்ப கல்வி பெற்றார். ரவுடகுண்டா அருகில் உள்ள ரங்கநாதர் கோவில் முதல் சோமலாபுரத்தின் அடர்ந்த வனப்பகுதி வரையிலும் உள்ள பல்வேறு குகைகளில் தியானத்தில் ஈடுபட்டார்.

பல ஆண்டுகால தவத்தால் மகிழ்ந்த தேவி, துறவிக்கு காட்சி அளித்தார். ‘என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார். ‘தனக்கு எதுவும் வேண்டாம். இந்த புனித இடம், ஒவ்வொரு பக்தரின் விருப்பத்தை நிறைவேற்றும் கோவிலாக மாற வேண்டும்’ என்று துறவி கூறினார்.

அவரது பக்தியால் நெகிழ்ந்த தேவி, ‘பகளாமுகி’யாக காட்சி அளித்தார். பகளாமுகி என்பது, ‘தன் பக்தர்களை தாக்கும் தீய சக்திகள், எதிரிகளின் வாக்கு, புத்தியை கட்டுப்படுத்தி ஸ்தம்பிக்கச் செய்பவள்’ என்று அர்த்தம்.

அன்று முதல் படிப்படியாக இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

ஜனவரியில் கோலாகல திருவிழா நடக்கிறது. இது தவிர, தசரா, நவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் அம்மனை தரிசிக்க, வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

எப்படி செல்வது?

* ரயிலில் செல்வோர், ராய்ச்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 2.2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோ, பஸ்சில் செல்லலாம்.
* பஸ்சில் செல்வோர், ராய்ச்சூர் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.
* கோவில் திறப்பு: அதிகாலை 4:00 முதல் இரவு 10:00 மணி
* திருவிழா: ஜனவரியில் ஆண்டு விழா, தசரா, நவராத்திரி.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar