Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னட ஆடி மாத சிவ பூஜை கோலாரில் 13ல் ... தெய்வீகப் பேரவை சார்பில் நால்வர் விழா தெய்வீகப் பேரவை சார்பில் நால்வர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமுண்டி மலையில் சிறுத்தை பக்தர்கள் பீதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாமுண்டி மலையில் சிறுத்தை பக்தர்கள் பீதி

பதிவு செய்த நாள்

11 ஆக
2026
11:08

மைசூரு: சாமுண்டி மலையில் சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறது. சுற்றுலா பயணியர், பக்தர்கள், அப்பகுதி மக்கள் கவனமாக இருக்கும்படி, வனத்துறை எச்சரித்துள்ளது.

மைசூரின், சாமுண்டி மலை வரலாற்று பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

சாமுண்டி மலையில் அவ்வப்போது சிறுத்தை, காட்டு யானை, கரடி, காட்டெருமை என, பல்வேறு வன விலங்குகள் நடமாடும். சமீபத்தில் சிறுத்தை நடமாடியது. இதனை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

சாமுண்டி மலை சாலை மற்றும் வியூ பாயின்ட் அருகில், சிறுத்தை நடமாடுகிறது. மலை அடிவாரத்திலும் தென்படுகிறது. நேற்று முன் தினம் இரவு சாலையில் சிறுத்தை நடமாடும் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சுற்றுலா பயணியர், பக்தர்கள் நடந்து மலையேறும் பாதையிலேயே சிறுத்தை தென்படுவதால், கவனமாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சாமுண்டி மலையில் சிறுத்தை நடமாடுவது, எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. மலையின் சுற்றுப்பகுதிகளில் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் டிராப் கேமரா மூலமாக, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கிறோம்.இதை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மலை சாலையில் நடந்து செல்வோர், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar