Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 10,000 குடும்பத்தின் குலதெய்வமான ஸ்ரீ ... பகவான் நாமத்தைச் சொல்: காஞ்சி மஹாபெரியவர் பகவான் நாமத்தைச் சொல்: காஞ்சி ...
முதல் பக்கம் » துளிகள்
மன கவலைகளை தீர்க்கும் கவுடகெரே சாமுண்டீஸ்வரி பசவண்ணர் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மன கவலைகளை தீர்க்கும் கவுடகெரே சாமுண்டீஸ்வரி பசவண்ணர் கோவில்

பதிவு செய்த நாள்

11 ஆக
2026
11:08

பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னப்பட்டணா தாலுகா கவுடகெரே கிராமத்தில், சக்தி வாய்ந்த சாமுண்டீஸ்வரி பசவண்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலின் முக்கிய ஈர்ப்பு என்னவென்றால், திறந்த வெளியில் உள்ள 60 அடி உயர சாமுண்டீஸ்வரி தேவி பிரமாண்ட ஐம்பொன் சிலை தான்.

சாமுண்டீஸ்வரி தேவி தனது 18 கைகளால், அசுரனை வதம் செய்யும் நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சிலையின் உயரம் காரணமாக, இக்கோவில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சிலும் இடம்பிடித்துள்ளது. இந்த சிலையை பெங்களூரை சேர்ந்த முஸ்லிம் சிற்பிகள் செதுக்கியதும் இன்னொரு கூடுதல் சிறப்பாகும்.

சிறிய விக்ரகம் இந்த கோவில் உருவான வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. பல ஆண்டுகளுக்கு முன் கவுடகெரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள், விவசாய நிலத்தில் விளையாடினர். அப்போது செங்கற்கள், இலைகளை கொண்டு சிறிதாக கோவில் போன்று அமைத்தனர். மல்லேஷ் என்ற சிறுவனுக்கு அந்த நிலத்தில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மனின் சிறிய விக்ரகம் கிடைத்தது. அந்த விக்ரகத்தை வைத்து வழிபட துவங்கிய சில நாட்களில் மல்லேஷுக்கு திடீரென சாமி வந்து மயங்கி விழுந்தார்.

ஜோதிடர்கள் மூலம் ஆராய்ந்த போது, மல்லேஷுக்கு, சாமுண்டீஸ்வரி அம்மன் அருள் இருப்பது தெரிந்தது. மல்லேஷ் கனவில் தோன்றி, பெரிய கோவிலை கட்டும்படி சாமுண்டீஸ்வரி அம்மன் உத்தரவிட்டார். அதன்படி, கிராம மக்கள் உதவியுடன் கோவில் கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் தர்மாதிகாரியாகவும், தலைமை அர்ச்சகராகவும் மல்லேஷ் உள்ளார்.

கோவில் காளை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அடுத்தபடியாக கோவில் காளையான, பசவண்ணரை பக்தர்கள் அதிகம் நம்புகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை மனதில் நினைத்து, காளை முன்பு தேங்காய் அல்லது பிரசாதத்தை கையில் ஏந்தி வரிசையில் நிற்பர்.

அந்த காளை பக்தர்கள் கையில் உள்ள பிரசாதத்தை தொட்டாலோ அல்லது தலையை அசைத்தாலோ, மனதில் வேண்டியது நிச்சயம் நடக்கும் என்று நம்பிக்கையாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியுடன் செல்லக்கூடாது என்பதால், காலை, மதியம், மாலை, இரவில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

தீராத மன கவலை, நோய்கள், குடும்ப பிரச்னைகள் தீர இங்குள்ள சிறப்பு பிரகாரத்தில் பக்தர்கள் தேங்காயை துணியில் முடிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின், கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். காளையின் அருள்வாக்கு காலை 8:00 மணியில் இருந்து துவங்கும். நவராத்திரியின் போது 9 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, நவராத்திரியை வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar