ஆடி செவ்வாய்; வளையல் அலங்காரத்தில் அன்னூர் மாரியம்மன் அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2026 01:08
கோவை; ஆடி மாதம் நான்காவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் ரோடு மாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. விழாவில் வளையல் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.