புதுச்சத்திரம் அடுத்த வாண்டியாம்பள்ளம் விநாயகர் கோவிலில் முருகன், மாரியம்மன், ஐயனார் ஆகிய தெய்வங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 24 ம் தேதி, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. மண்டலாபிஷேக நிறைவு விழா இன்று நடந்தது. அதையொட்டி காலை 9.00 மணிக்கு சிறப்பு ஹோமம், 11.30 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை, 12.00 மணிக்கு விநாயகர், முருகன், அம்மன், ஐயனார் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.