தெலுங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்த அர்ச்சகர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2026 05:08
ஜோகுலாம்பா; தெலுங்கானா மாநிலம் ஜோகுலாம்பா காட்வால் மாவட்டம் பீச்சபள்ளி கிருஷ்ணா நதிக்கரையில், நல்ல மழை பெய்து வளம் பெருக வேண்டியும், வருண பகவானை வேண்டிக்கொண்டும் அர்ச்சகர் அனில் சர்மா கரையில் சிக்கிய முதலை மீது பூக்கள் தூவி சிறப்புப் பூஜைகள் நடத்தினார்.
ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள பீச்சுபள்ளியில், கிருஷ்ணா நதியின் புஷ்கர் படித்துறைக்கு அருகே முதலை ஒன்று வெளியே வந்தது. மீனவர்கள் கயிறுகளைப் பயன்படுத்தி அதனைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். வருண பகவானின் வாகனமாகக் கருதப்படும் அந்த முதலைக்கு, நல்ல மழை பொழிய வேண்டி அனில் சர்மா என்ற அர்ச்சகர் மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்களைக் கொண்டு சிறப்புப் பூஜை செய்தார். அந்தச் சடங்கு முழுவதும் முதலை அமைதியாகவே இருந்தது. பூஜைக்குப் பிறகு, காவல்துறை மற்றும் வனத்துறையினர் அதனைப் பாதுகாப்பாக மீண்டும் ஆற்றில் விட்டனர்.